ஸ்ரீ சங்கர மடம், திருவானைகோயில், திருச்சி

ஸ்ரீ சங்கர மடம், திருவானைகோயில், திருச்சி

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜம்புநாத திருகோயில், திருவானைகோயிலில் (திருச்சிராபள்ளி அருகில்) அமைந்திருக்கிறது. இத்திருகோயில் ஸ்ரீரங்கத்தை அடுத்து திருச்சியிலிருந்து சுமார் 3 கிமீல் அமைந்திருக்கிறது. பஞ்சபூத ஷேத்திரங்களின் (நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு) ஒன்றான நீரை குறிப்பதனாலே அப்பு ஸ்தலம் என்று பெயர் பெற்றது மற்றும் இங்கே அமைந்திருக்கும் சிவ லிங்கமும் அப்பு லிங்கம் என பெயர் பெற்றது. இச்சிவலிங்கதிற்கு அருகே நிலத்தடி நீர் இடைவிடாது வருவதை நாம் காணலாம். இங்கு ஸ்ரீ ஆதி சங்கராசார்யாள், அம்பாள் அகிலாண்டேஸ்வரி திருஉருவிற்கு காதணி (தாடங்கம்) அணிவித்து அலங்கரித்துள்ளார். திருவானைகோயிலில் உள்ள ஸ்ரீ சங்கர மடம், திருகோயிலின் வலப்பக்கதில் வட மட சாலையில் அமைந்திருகிறது.

திருச்சி மற்றும் சில இடங்களுக்கு பூஜ்யஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் வருகை தந்தபோது மடத்தில் தங்கிருந்து நித்ய திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜையை நடத்தினார். ஸ்ரீமடத்தின் உள்ளே வேத பாடசாலையும் முதியோர் இல்லமும் இயங்கி வருகிறது .


ஸ்ரீ சங்கர மடம் கிளைகள்